suriya movie banned
suriya movie banned
தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் நடிகர் சூரியா நடித்த படங்களையும், அவரது தயாரிப்பு நிறுவனமான 2 டி பொழுதுபோக்கு தயாரிக்கும் படங்களையும் தடை செய்வதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளதாக பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ,தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து,நடிகர் சூரியா தயாரித்து அவரது மனைவி ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடப்படும் என்ற செய்தியே இதற்கு கரணம் ஆகும்.படத்தின் மொத்த பட்ஜெட்டை விட இரு மடங்கு விலைக்கு விற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பாருங்க : பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?
இதைத் தொடர்ந்து, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதுதாவது , நடிகர் சூரியாவின் இந்த முடிவு களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றும் , எனவே சூரியாவின் படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என்ற முடிவைக் கூறும் வீடியோவை வெளியிட்டார்.
The General Secretary of the #TamilNadu Theatre and Multiplex Owners Association, R Panneer Selvam, has announced that their association has decided to not release any film involving actor #Suriya or his home production banner #2DEntertainment hereafter.#PonMagalVandhal pic.twitter.com/FQtHMzkhKF
— Silverscreen.in (@silverscreenin) April 24, 2020
தியேட்டர்களுக்காக தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும், OTT தளங்களில் அல்ல என்று அவர் கூறினார். இந்த முடிவை ரத்து செய்யாவிட்டால், சூரிய நடித்த படங்களை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோடியா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரை படத்தை தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பு OTT மேடையில் வெளியிடுவதற்கு முன்னேறினால், சூரியாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சூரரைப் போற்று’ வெளியீட்டை இது பாதிக்குமா? என்ற குழப்பத்தில் உள்ளனர் சூரியாவின் ரசிகர்கள்…
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமொன்டில் தெரிவியூகள் !!
Pretty! This was a really wonderful post. Many thanks for
supplying this info.