Happy Birthday Thala Ajith

Happy Birthday Thala Ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னேறித் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்றவர் திரைப்பட நடிகர் திரு. அஜித் குமார் ஆவார்.

தற்போது நிலவும் சூழலில் அவர் பெரிய அளவில் தனது பிறந்த விழாவை கொண்டாட மறுப்பார் என்பது பலர் அறிந்த  விஷயம் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவர் பிறந்த நாளை சமூக வலைத்தளங்களில் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை முதலே ட்விட்டரில் #HappyBirthdayThalaAjith #HBDThalaAjith #ThalaAjith #தலஅஜித் #HBDDearestThalaAJITH ஆகிய ஹேஷ் டேக்குகளில் அஜித் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த தனி மனிதனை நல்ல நடிகர் என்று சொன்ன ரசிகர்களைவிட நல்ல மனிதன்  மற்றும் ரோல் மாடல் என சொல்லும் ரசிகர்களே இங்கு அதிகம். நடிப்பு மட்டும் இன்றி ஆட்டோமொபைல் துறையிலும் இவர் சிறந்து விளங்குபவர் ஆவார்.

பல சாதனைகள் புரிந்து விட்ட தல என்னும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாருக்கு TMN இன் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க : முக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here