Arivum Anbum Video Song

Arivum Anbum Video Song

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் பரவி வருவதால் மத்திய அரசானது மே 3 வரை லாக் டவுன் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை
23,000 கும் மேற்பட்டோர்ரூக்கு பரவியுள்ளது. 700 கும் அதிகமோனோர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.

இந்த கடினமான சூல்நிலையில் இந்தியாவில் லாக்டவுன் நேரத்தில் தினக்கூலி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாடம் விற்பனை செய்தால்தான் கால் வயிற்று கஞ்சிக்கு வழி என்பவர்கள் உண்ண உணவில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

அரசு ஒரு புறம் உதவிகளை செய்தாலும், அதே போல பல தன்னார்வலர்களும் முன்வந்து உதவுகிறார்கள். இந்த நிலையில் அனைவரிடமும் அன்பு செலுத்தி உதவி தேவையானவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அணைவரின் மனதிளும் வருகிறது என்றே கூறலாம்

இதையும் பாருங்க : கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு தளபதி விஜய் ரூ .1.30 கோடி நன்கொடை அளித்தார்

கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி, இயக்கியிருக்கிறார்.

பிரபல நிறுவனமான திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள ‘அறிவும், அன்பும்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

மாஸ்டர் லிடியன்,பாடகர்கள் பாம்பே ஜெயஶ்ரீ, சித்ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், தேவி ஶ்ரீ பிரசாத், திரைப்பட நட்சத்திரங்களான ஆண்ட்ரியா, சித்தார்த், பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ், ஸ்ருதிஹாசன், உள்ளிட்டோர் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கின்றனர்.

Arivum Anbum Video Song

மேலும் படிக்க : தலைவரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .. வீடியோ உள்ளே !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here