New Companies To Set up Manufacturing Plants in India
இந்தியாவில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்ற எலெட்ரானிக் சாதனங்களுக்கு பயன்படும் மின்னணு சிப்கள், டிஸ்ப்ளேக்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை அமைக்க பல்வேறு நிறுவனங்கள் முன்மொழிவுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.
வேதாந்தா, சிங்கப்பூரை சேர்ந்த ஐஜிஎஸ்எஸ் வென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி ஆலைகளை இந்தியாவின் பல இடங்களில் நிறுவ விண்ணப்பித்துள்ளன.
மத்திய அரசின் தொழில் துறையை ஊக்குவிக்கும் மேடு இன் இந்தியா மற்றும் செயல்திறன் அடிப்படையிலான திட்டத்தின் கீழ், இந்நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க முன்வந்துள்ளன.
அடுத்து வரும் ஆறு ஆண்டுகளுக்கு செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 76 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த திட்டம் மூலம் சுமார் பல லட்சம் பட்டதாரிகள் மற்றும் தொழில்முனைவோர் நேரடியாகவோ மறைமுகமோவோ பயன் பெறுவார்.
மேலும் படிக்க :
Follow Us at Google News : :
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.