‘சிஎஸ்கே பேட்ஸ்மேன்’…களத்துல இருக்கும்வரை வெற்றி பெறுவது கடினம் : ஸ்டாய்னிஸ் கருத்து!

0
91
Marcus Stoinis Recalls Ms Dhoni Advice
Marcus Stoinis Recalls Ms Dhoni Advice

Marcus Stoinis Recalls Ms Dhoni Advice

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த வாரம் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் 67 வெளிநாட்டு வீரர்களும், 137 உள்நாட்டு வீரர்களும் அடங்குவர். இவர்களது மொத்த மதிப்பு 551.70 கோடி ரூபாய் ஆகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா 25 பேரை வாங்கியுள்ளன. இதுதான் அதிகபட்சம். குறைந்தபட்சமாக லக்னோ அணி 21 பேரை மட்டுமே வாங்கியுள்ளது.

மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கப்பட்ட மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக டெத் ஓவர்களில் அபாரமாக விளையாடி மேட்ச் வின்னராக இருந்து வந்தார். இதேபோல், ஐபிஎல் 15ஆவது சீசனிலும் லக்னோ அணிக்காக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாய்னிஸ் பேட்டி:

இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டி கொடுத்துள்ளார். அதில், “கடந்த ஆண்டு ஐபிஎல் அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகு தோனியுடன் நான் பேசினேன். அப்போது, அந்த போட்டி குறித்து தோனி நிறைய விஷயங்களை பேசினார். போட்டிகளை எவ்வாறு பார்க்க வேண்டும், சூழ்நிலையை எப்படி சமாளிக்க வேண்டும், உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்து பேசினார்” என்றார்.

மேலும் பேசிய அவர், “பொதுவாக, களத்தில் தோனி இருக்கும்வரை வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை அணிக்கும், ரசிகர்களுக்கும் இருக்கும். வெற்றிபெற வாய்ப்பு குறையும்போது, வித்தியாசமாக யோசித்து வெற்றியைப் பெற்றுத்தர போராடுவார். என்னால் நிச்சயம் அப்படி யோசிக்க முடியாது. கடைசி ஓவருக்கு 20 ரன்கள் தேவைப்படும்போதும், அவரால் அதை அடிக்க முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும். என்னைக் கேட்டால், இதுதான் அவர் உருவாக்கி வைத்த கலை. எதிரணி தடுமாறும்போது, அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் கெட்டிக்காரர்” என புகழ்ந்து பேசினார்.

மேலும் படிக்க :

  1. IPL2022 : சிஸ்கே வால் ஏலம் எடுக்க பட்ட ‘U 19’ வீரர்.. மோசடி வேலை பாத்தாரா?.

Follow Us at Google News : :

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here