ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு டீஸர் – டைட்டில் என்ன தெரியுமா ?

    0
    57
    - ADS BY ADSTERRA -

    நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் ரசிகர்கள் அனுமதி இருந்தால் மட்டுமே வெளியிடுவதாவும் ட்விட்டர் இல் தெரிவித்திருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் அவரிடம் டீஸரை வெளியிடும்படி கேட்டிருந்தனர்.

    அதன் படி தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்த படத்துக்கு ‘மோகன்தாஸ்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.

     mohan das

    மேலும் காந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் காந்தியத்தை பேசக்கூடிய படமாக இது இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், டீஸரின் துவக்கத்திலேயே காந்தியின் மற்றொரு புகழ்பெற்ற வாசகமான தீயதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பதற்கேற்ப மூன்று குரங்குகள் காட்டப்படுகிறது.

    இதையும் பாருங்க : பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?

    அதன் பின்னணியில் விஷ்ணு விஷால் வெறித்தனமாக ஒரு கொலை செய்கிறார். பின்னர் சர்வ சாதரணமாக நடந்து வந்து ரத்தம் தெறித்த தனது உடைகளை சலவை செய்கிறார். இது அந்த எண்ணத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

    தற்போது இந்த படத்தின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது .
    அந்த ரத்தம் தெறிக்க தெறிக்க ஓடும் டீஸர் சை நீங்களே பாருங்கள் !!!

    இந்த படத்தின் மூலம் தனது முந்தய பிளாக் பஸ்டர் படமான ராட்ஷகனுக்கு சவால் விடுவாரா என்று கீழே கமெண்ட் செய்யுங்கள்

    - ADS BY ADSTERRA -

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here