வெனம் 2 ஆம் பாகத்தின் பெயர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

  0
  34
  Venom 2: Venom Let There Be Carnage | Tamil Movie News | Hi5Fox
  Image Source : Twitter

  Venom Let There Be Carnage

  Venom Let There Be Carnage

  மார்வல் என்ற வார்த்தை தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது என்று கூறும் அளவிற்கு உலகில் உள்ள மூல முடுக்கலாம் பரவி இருக்கும் மார்வல் கதாபாத்திரம் ஆனது சிறியவர் முதல் பெரியவர் வரை தனெக்கென ஒரு கூட்டத்தை கொண்டுள்ளது இந்த மார்வல் என்றே கூறலாம்.

  குறிப்பாக மார்வல் சினிமா மூலம் உருவான முக்கிய கதாபாத்திரம் வால்வரின் ,இரும்பு மனிதன் , கேப்டன் அமெரிக்கா போன்றவர் ரசிகர்களால் அதிகம் விரும்ப படுவர்களில் முதன்மையானவர்கள் ஆவர்.

  மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான சூப்பர் ஹீரோ படம் ‘வெனம்‘. டாம் ஹார்டி இதில் நாயகனாக நடித்திருந்தார். சோனி-மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் புதிய திரைப்பட வரிசையில் முதல் படம் இதுவே. மேலும் ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தோடும் நேரடித் தொடர்புடைய கதாபாத்திரம் ‘வெனம்’.

  இதையும் பாருங்க : அலற வைத்த கைதி வில்லன் அர்ஜுன் தாஸ் !!

  2018-ம் ஆண்டு வெளியான ‘வெனம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பையும், புதிய வெளியீட்டுத் தேதியையும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

  தற்போது இரண்டாம் பாகத்தின் பெயர் ‘வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் ஹார்டி மீண்டும் நாயகனாக நடிக்க, ஆண்டி செர்கிஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். வுட்டி ஹாரெல்ஸன் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். முன்னதாக, இந்தப் படம் அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  ஆனால், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம், ‘தி பேட்மேன்’ படத்தை அதே நாளில் வெளியீடு செய்வதாக அறிவித்துள்ளதால், ‘வெனம்’ இரண்டாம் பாகம் திட்டமிட்டதற்கு முன்னதாகவே, ஜூன் 25, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க : மார்வெல் ஸ்டுடியோவின் Black Widow New Poster

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here