Surya Supports Jyothika Speech
Surya Supports Jyothika Speech
இது குறித்து ஜோதிகாவின் இந்த கருத்துகாலால் எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா அறிக்கையாக தனது பதிலை தெரிவித்துள்ளார்.
இதையும் பாருங்க : ஜோதிகாவின் சர்ச்சை பேச்சால் தஞ்சை கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு!!
இது தொடர்பான அறிக்கையில்,
மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதில்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதி அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும் சமூக ஊடகங்களில் விவாதமாக மாறியிருக்கிறது.
கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்தில் உள்ள வாக்கு. நல்ல சிந்தனைகளை காது கொடுத்து கேட்காத நபர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கரோனா காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மதங்களை கடந்து மனிதம் முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள் நண்பர்கள் ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகம் அறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதிலளிக்கிறார்கள். நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்கிறார்கள்… எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்..
#அன்பைவிதைப்போம் #SpreadLove pic.twitter.com/qjOlh8tHtV
— Suriya Sivakumar (@Suriya_offl) April 28, 2020
இவ்வாறு நடிகர் சூர்யா அவர்கள் தனது விளக்க அறிக்கையில் குறிப்புட்டுள்ளார். இதனை பெரும்பானோர் மதிப்புக்குரியதாக கருத்துகின்றனர்.
ஒரு புறம் இவரது ரசிகர்கள் இந்த செய்தியை #அன்பைவிதைப்போம் என்ற ஹாஷ்டாக் உருவாக்கி இந்தியா அளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : நடிகை சஞ்சனா சிங்கின் உண்மை குணம் !!