ஜோதிகாவின் சர்ச்சை பேச்சால் தஞ்சை கலெக்டர் எடுத்த அதிரடி முடிவு!!

0
45

Jyothika controversy speech

Jyothika controversy speech

Jyothika controversy speech | Tamil Movie News
Image Source : Google

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. இவர் பிரபல 80’ஸ் 90’ஸ் நடிகரான சிவகுமாரின் மூத்த மகனும் முன்னணி நடிகரான  சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

நடிகை ஜோதிகா தனது கருத்துக்களை பொது வெளியில் தைரியமாக சொல்ழும் குணம் கொண்டவர் ஆவார் .

நான் சமீபித்தில் சென்ற `தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் அதன் பராமரிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது’  எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்க என்றும் என விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா வெளிப்படையாக தெரிவித்தார்.

இதையும் பாருங்க : கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு தளபதி விஜய் ரூ .1.30 கோடி நன்கொடை அளித்தார்

இதனால் ஒரு சில நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக ஜோதிகாவை மட்டுமின்றி சிவகுமார் குடும்பத்தையே வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை ஜோதிகா தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கமும் வரவில்லை என்றாலும் ஜோதிகாவுக்கு நெருக்கமான பல திரையுலக பிரபலங்கள் ஜோதிகா எந்த உள்நோக்கத்தோடும் இதனை பேசவில்லை என்றும் அவர் பேசியது சரிதான் என்றும் அவர் கூறியதை சிலர் உள்நோக்கத்தோடு திசை திருப்பிவிட்டனர் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

ஜோதிகாவின் சர்ச்சையான பேச்சை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர்
கோவிந்தராவ் அவர்கள் கடந்த புதன்கிழமை`தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகளுடன் விரைந்து சென்று அதிரடி ஆய்வு நடத்தினார்.

ஜோதிகா பேசியதை போன்று மருத்துவமனையில் ஏதேனும் குறையிருந்தால் அதனை சரி செய்ய இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

எது எப்படி யோ நம்ம நாட்டுக்கு நல்லது நடந்தா அது சந்தோசமே . இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமொன்டில் தெரிவியூகள் !!

மேலும் படிக்க : தளபதி Vijay’s ‘Master’ Movie Vaathi Coming Video Song

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here