மீண்டும் இணையுமா ‘ராட்ச்சசன்’ கூட்டணி.!!

0
108
- ADS BY ADSTERRA -

Ratchasan Team

Ratchasan Team

Ratchasan Team | Hi5Fox
Ratchasan Team | Hi5Fox

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தற்போது தமிழ் சினிமா முக்கிய நடிகர்களில் ஒருவராய் இருக்கிறார்,ஏனெனில் அவர் தேர்வு செய்து நடிக்கும் எல்லா திரைப்படங்களும் மாறுபட்டு தனித்துவமாக இருக்கும் .

அந்த வகையில் அவர் தேர்வு செய்து நடித்த பல நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் கவனிக்க வேண்டியவர் என்றால் அது இயக்குனர் ராம் குமார்.

2014-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘முண்டாசுபட்டி’ என்ற நகைச்சுவை படத்திற்காக முதல் முறையாக இயக்குனர் ராம் குமாருடன் ஜோடி சேர்ந்தார் நடிகர் விஷ்ணு விஷால்.

இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆகி, விமர்சன ரீதியாக வெகுவாக பாராட்டப்பட்டது.

அதன் பிறகு , ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து 2018-ஆம் ஆண்டு வெளியான உளவியல் த்ரில்லர் படமான ‘ராட்சன்‘ திரைப்பட ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்தது.

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

சமீபத்தில், ரசிகர் ஒருவர் ‘முண்டாசுபட்டி’ மற்றும் ‘ராட்ச்சசன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஒப்பிட்டு, ஒரே இயக்குநர், அதே ஹீரோ, இரண்டு வெவ்வேறு உச்சம், ஆனால் ஒரே முடிவு, அது தான் ‘பிளாக்பஸ்டர்’ என்று விஷ்ணுவையும் ராம் குமாரையும் பாராட்டி மீம் வெளியிட்டிருந்தார்.

இதனை கவனித்த நடிகர் விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் “ இயக்குநர் ராம் குமார். 3வது எக்ஸ்ட்ரீமுக்கு காத்திருக்கிறேன்?” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், இந்த வெற்றிக் கூட்டணி விரைவில் மற்றோரு பிளாக்பஸ்டர் திரைப்படத்துக்காக இணையவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது நடக்கு மா என்பதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here