21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி !!

0
370

Vijay Birthday CDP 2020 - 21 top celebrities of Film industry do this for Thalapathy Vijay for his birthday! | Who are all Going to Release Bday Thalapathy Vijay Common DP ..

Vijay Birthday CDP 2020

நடிகர் விஜய் அவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக வெளியில் சென்று கொண்டாட முடியாததால் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

தற்போது அதன் ஒரு பகுதியாக இன்று தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி வெளிவந்துள்ளது . அது தற்போது தற்போது உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

vijay birthday cdp 2020 - Hi5Fox
vijay birthday cdp 2020 – Hi5Fox

சினிமா துறையின் 21 டாப் பிரபலங்கள் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் ,வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா , இந்துஜா , அமிர்தா , கதிர் , விக்ராந்த் , வைபவ் ,டேனியல் பாலாஜி ,ஹேமா ருக்குமணி ,தனஞ்ஜயன் ,தமன் ,லிரிசிஸ்ட் விவேக், மோகன்ராஜா,சாந்தனு, அஜய் ஞானமுத்து, கோபி பிரசன்னா , அருண்ராஜா காமராஜ் , ரத்தன குமார் ஆகியோர் இந்த காமன் டிபியை வெளியிட்டு உள்ளனர்.


நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் மற்ற மலையாள ஹீரோக்களின் படங்களை காட்டிலும் விஜய் படம் ரிலீஸ் ஆனால் அதன் வசூல் அதிகம் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

அது போல கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் கூட விஜய்க்கு சமீப வருடங்களாக அதிக வசூல் கிடைத்து வருகிறது.

#THALAPATHYBdayFestCDP மற்றும் #Master ஆகிய ஹாஸ் டேக்குகள் தற்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை இரண்டிலும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ட்விட்களை பதிவிட்டு தளபதி விஜய்யின் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

வருகின்ற ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here