விக்ரமும் துருவும் மோதும் புது படம் ?

இயக்குனர் யாருனு தெரியுமா ?

0
44

vikram and dhruv movie

vikram and dhruv movie - Hi5Fox
vikram and dhruv movie

நடிகர் சியான் விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவிதம் அளவு முடிந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் இப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

இதையும் பாருங்க : மாஸ்டர் நேரடி OTT ஆபர் இவளோ கோடியா?

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதையை தயார் செய்து நடிகர் விக்ரமிடம் சொல்லி ஓகே ஆனதாகவும். மேலும் இப்படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்க உள்ளதாக புது தகவல்கள் கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகின்றன. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெறுகின்றன.

துருவ் விக்ரம் கடந்த வருடம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

vikram and dhruv movie | Karthik Subbaraj - Hi5Fox
vikram and dhruv movie | Karthik Subbaraj

ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் நடிப்பிற்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் இப்படம் சரியாக அமையும் பட்ஷத்தில் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் படிக்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here