OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

0
206
Master Movie Release In OTT
Master Movie Release In OTT

Master Movie Release Date

Master Movie Release Date

Master Movie Release In OTT

கைதி என்ற மாபெரும் படைப்புக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லலித்குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுருந்தது. ஆனால் உலகமே இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக மக்கள் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர் .

இன்னும் 20 நாட்கள் இறுதிக்கட்டப் பணிகள் இருப்பதாகவும், ‘மாஸ்டர்’ எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த லாக் டவுனைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை டிஜிட்டல் நிறுவனங்கள் அதிக விலைக்கு கைப்பற்றி வருகின்றன.

மாஸ்டர்‘ படக்குழுவினரிடம் டிஜிட்டல் நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. என்னவென்றால், ‘மாஸ்டர்’ படத்தைக் கைப்பற்ற டிஜிட்டல் நிறுவனம் மிகப்பெரும் தொகையைக் கொடுக்க முன்வந்துள்ளார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் விஜய்யிடம் கேட்டதற்கு, “இதை விடப் பெரிய தொகை கொடுத்தாலும் வேண்டாம். நான் படம் பண்ணுவது என் ரசிகர்களுக்காகத் தான்.

அவர்கள் திரையரங்கில் கொண்டாடுவதற்காகத் தான்” என்று சொல்லியிருக்கிறார் விஜய். இந்த விஷயத்தை அப்படியே அமேசான் நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார் லலித்குமார் . இது தான் தளபதி விஜயின் முடிவாம்.இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் செய்யுங்கள் !!!!

மேலும் படிக்க : 

முக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் !!

டாப் 5 விஜய் மூவிஸ் 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here