Thalapathy 65 Latest News

Thalapathy 65 Latest News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லலித்குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக திரைப்படத்தை வெளியிடுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இருப்பினும் தளபதி விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கு தளபதி விஜய் ஒப்புக்கொண்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

கடந்த வருடங்களில் தளபதி விஜய் ஒரு திரைபடம் நடித்து முடிப்பதுற்குள் அவரின் அடுத்த படத்தின் அறிவுப்பு வருவதே வழக்கம் .அதே போல தளபதி 65 ஆனது தமிழ் சினிமாவின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது அனைவர்க்கும் தெரியும்.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

ஆனால் படத்தின் இயக்குனர் யார் என்பதில் பலவேறு குழப்பம் , ஏனெனில் பல முன்னனி இயக்குனர்கள் தளபதி 65 யை இயக்கும் லிஸ்ட் இல் இருந்தார்கள்.

அதில் முக்கிய மானவர்கள் , வெற்றிமாறன் , சுதா கே பிரசாத், அருண் காமராஜ் ,மகிழ் திருமேனி என்ற பல இயக்குனர்கள் போட்டியிட்டனர்.இறுதியில் தளபதியின் வெற்றி இயக்குனர்களில் ஒருவரானா ஏ.ஆர். முருகதாஸ் அந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் தான் தளபதி 65 இயக்குனர் ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது என்பதால் ரசிகர்கள் அனைவருமே மாஸ்டர் க்கு பிறகு துப்பாக்கி 2 என கொண்டாடி வருகின்றனர்.அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் துப்பாக்கியின் கேமராமேன் சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டெக்ராமில் தகவல் ஒன்றை பரிமாறி உள்ளார்.

Thalapathy 65 Latest News

 

View this post on Instagram

 

A post shared by Santosh Sivan ISC ASC (@sivan_santosh) on


இதனால் தளபதி 65 ஆனது கண்டிப்பாக துப்பாக்கி 2 என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.அது உண்மயாகும் பட்சத்தில் அது பல்வேறு சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தளபதி 65 யின் அடுத்த படம் துப்பாக்கி 2 அல்லது நியூ சப்ஜெக்ட் ஆ , இரண்டில் எதை நீங்கள் ஆவலோடு எதிர்பாக்குகிறீர்கள் என்று கீழே கமெண்ட் செய்யுங்கள் !!

மேலும் படிக்க : முக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் !!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here