Thalapathy Vijay Corona Relief Fund

Thalapathy Vijay Corona Relief Fund

கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக நடிகர் தளபதி விஜய் 1.30 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். கோவிட் -19 நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ள கோலிவுட் நட்சத்திரங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், சூர்யா, விஜய் சேதுபதி ,சிவகார்த்திகேயன் மற்றும் பலரும் அடங்கிய பட்டியலில் தளபதி விஜய் இணைந்துள்ளார்.

இதையும் பாருங்க : ஒரு குட்டி கதை Official Song From மாஸ்டர்

மக்கள் மத்தியில் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, விஜய் தனது ரசிகர் மன்றங்களுக்கு மாநிலங்கள் முழுவதும் ஒரு மிக பெரிய தொகையை விநியோகித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.3 கோடி ரூபாய் நாடு முழுவதும் பல்வேறு நிவாரண நிதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

-பிரதமர் நிவாரண நிதிக்கு சுமார் 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்திற்கு (ஃபெஃப்ஸி) 25 லட்சம், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதி, கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம்.

Thalapathy Vijay Corona Relief Fund

தமிழகத்தை தாண்டி கேரளாவில் மலையாள நடிகர்களை விட அதிக ரசிகர்களை கொண்டுள்ளார் என அனைவருக்கும் தெரியும் . அதனால் அவர் கேரளாவிற்கு நிவாரண நிதி வழங்குவதாக நாம் எடுத்து கொள்வோம் .

மற்ற மாநிலம் மான ஆந்திர,கர்நாடக,தெலுங்கானா ஆகிய மாநிலகளில் வளர்ந்து வரும் நடிகரே ஆவார் . இருப்பினும் தன்னலம் கருதாமல் உதவி செய்ததன் மூலம்  அந்த மாநில மக்களின் மனதிலும் ஒரு இடத்தை பிடித்துருக்கிறார் என்பதில் எந்த வொரு சந்தேகமும் இல்லை . இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் செய்யுங்கள் !!!!

மேலும் படிக்க : தளபதி Vijay’s ‘Master’ Movie Vaathi Coming Video Song

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here