இந்தியா: டி20 போட்டிகளில் 100வது வெற்றியை பதிவு செய்துபுதிய உலக சாதனை படைத்துள்ளது

0
8
India Gets Fastest Team To Register 100 t20 Wins
India Gets Fastest Team To Register 100 t20 Wins
- ADS BY ADSTERRA -

India Gets Fastest Team To Register 100 t20 Wins

வெஸ்ட் இண்டிசுக்கான எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியிழும் பிப்ரவரி 18ஆம் தேதியன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா 2– 0* என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ரிஷப் பண்ட் அரைசதமடித்தனர்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற டி20 தொடரை கைப்பற்றியது.

100வது வெற்றி:

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100-வது வெற்றி என்ற சிறப்பை பெற்றது.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளை பதிவு செய்த 2வது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

100 டி20 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக ஏற்கனவே பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது என்றாலும் அதிவேகமாக 100 வெற்றிகளை பெற்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.

மேலும் படிக்க :

  1. ‘அந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்’…களத்துல இருக்கும்வரை வெற்றி பெறுவது கடினம் : ஸ்டாய்னிஸ் கருத்து!

Follow Us at Google News : :

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here