IPL2022 : சிஸ்கே வால் ஏலம் எடுக்க பட்ட ‘U 19’ வீரர்.. மோசடி வேலை பாத்தாரா?.

0
9
Rajvardhan Hangargekar Accused Of Age Fudging
Rajvardhan Hangargekar Accused Of Age Fudging

Rajvardhan Hangargekar Accused Of Age Fudging

ஐபிஎல் 2022 மெகா ஏலம், கடந்த வாரம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து, மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நடந்து முடிந்தது.

இதில், பல் நட்சத்திர வீரர்களை, அனைத்து அணிகளும், கடுமையான போட்டிக்கு மத்தியில் தூக்கியிருந்தது.

அதே போல, பல இளம் வீரர்களையும் அணியில் இணைக்க, கடும் போட்டி நடைபெற்றிருந்தது. சமீபத்தில், நடந்து முடிந்த U 19 உலக கோப்பைத் தொடரை, யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

சிஸ்கே வில் ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர்

சிஸ்கே வில் இடம் பெற்றிருந்த சில வீரர்கள், பிரபல ஐபிஎல் அணிகளுக்கு ஏலம் போயினர். இதில், U 19 நட்சத்திரமான ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கரை அணியில் எடுக்க, மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் போட்டி போட்டிருந்தது. இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரை 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக் கூடிய, அதே வேளையில், அதிரடி பேட்டிங்கும் செய்யக் கூடிய ராஜ்வரதனை சிஎஸ்கே எடுத்ததால், நிச்சயம் தோனி அவரை பயன்படுத்துவார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

முறைகேடு

இதனிடையே, இளம் வீரர் ராஜ்வர்தன் குறித்து எழுந்துள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய உண்மையான வயதை மறைத்து மோசடி செய்ததாக, ராஜ்வர்தன் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா, ராஜ்வர்தன் தன்னுடைய உண்மையான வயதான 21-ஐ மறைத்து விட்டு, U 19 உலக கோப்பையில் இடம்பெற்றதாக, பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவற்றுடன் இதற்கான ஆதாரத்தையும், ஓம்பிரகாஷ் பகோரியா சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 7 ஆம் வகுப்பு வரை, ஜனவரி 10, 2001 என் இருந்த ராஜ்வர்தன் பிறந்த தேதி, 8 ஆம் வகுப்பில், நவம்பர் 10, 2002 ஆக மாறியுள்ளது. இதன் காரணமாக தான், அவர் U 19 உலக கோப்பை அணியிலும் இடம் பிடித்தார் என்றும், ஓம்பிரகாஷ் பகோரியா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அனைத்து ஆதாரங்களையும் அவர் இணைத்து, பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் தகவல், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. U 19 உலக கோப்பைத் தொடரில், ராஜ்வர்தனின் ஆட்டத்தை பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

  1. ‘அந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்’…களத்துல இருக்கும்வரை வெற்றி பெறுவது கடினம் : ஸ்டாய்னிஸ் கருத்து!

Follow Us at Google News : :

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here