ஹிட்மேன் ரோகித் சர்மாவின் 33வது பிறந்தநாள்

0
26

Rohit Sharma Birthday

Rohit Sharma Birthday

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா இன்று தன்னுடைய 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ரோகித் சர்மாவின் பிறந்த தினத்தையொட்டி சக வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சொந்த ஊராகக் கொண்ட ரோகித் சர்மா, 2007-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அடியெடுத்து வைத்தார்.

அவருடைய திறமையை பற்றி அப்பொழுது யாருக்கும் தெரியாது மேலும் போதிய வாய்ப்புகளும், அதிர்ஷ்டமும் இல்லாமல் தள்ளாடி வந்த இவரை, முன்னாள் கேப்டன் தோனி தொடக்க வீரராக ஆடும் வாய்ப்பை வழங்கினார்.

happy birthday rohit sharma

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை (3 முறை) இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர், ஒரு நாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ரன் (264) விளாசிய வீரர், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக முறை சதம் விளாசிய வீரர் (5 முறை) என்ற பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.

மேலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் 4 முறை மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையையும் மற்றும் ஐபிஎல் லில் கேப்டன் தோனிக்கு இணையான கேப்டன் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படி, கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா, தனது 33-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அடுத்தடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : புட்ட பொம்மா பாடலுக்கு வார்னர் நடனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here