KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

நடிகர் யஷ் கதாநாயகனாக நடிகும் கன்னட படமான KGF Chapter 2 இல் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

0
106

KGF Chapter 2 Shooting Update

நடிகர் யஷ் கதாநாயகனாக நடிகும் கன்னட படமான KGF Chapter 2 இல் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இந்த செய்தியை நடிகர் பிரகாஷ் ராஜ் அவருடை ட்விட்டர் பக்கத்தில் மூலம் ரசிகர்களுக்கு தெரிய படுத்திள்ளார்.

KGF Chapter 2 Shooting Update
KGF Chapter 2 Shooting Update

நடிகர் பிரகாஷ் ராஜ் , KGF Chapter 2 இன் படப்பிடிப்பு போது எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியுட்டுள்ளார் .

ஒரு புகைப்படத்தில், அவர் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் உரையாடுவதைக் காணலாம்.இப்புகைபடங்களிலிருந்து, KGF Chapter 2 இல் பிரகாஷ் ராஜ் மற்றும் மாலவிகா அவினாஷ் நடிக்கும் சில முக்கியமான காட்சிகளை படமாக்க படுவது தெளிவாக தெரிகிறது.

முந்தைய நேர்காணல்களில், இயக்குனர் பிரசாந்த் நீல், இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது, மேலும் அவர்கள் அடுத்த மாதம் படத்தை முடிக்கவும் திட்டமிட்டுளோம் என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். KGF Chapter 2 இல் ஆதீரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

மேலும் படிக்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை முடித்தவுடன் ஷூட்டிங்கில் கலந்து கொள்வர் என்று தெரிவிக்க பட்டுள்ளது. KGF Chapter 2 அவர் சார்ந்த பகுதியை முடிக்க மூன்று நாட்கள் படப்பிடிப்பு அவர் கலந்து கொள்ளவேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

KGF Chapter 2 ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திதிரைப்படம் அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் வரவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, படம் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு உலகளவில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here