தளபதி விஜய், அனிருத்திற்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?

0
109
raghava lawrence news | Tamil Movie News | Hi5Fox
raghava lawrence news | Tamil Movie News | Hi5Fox

Raghava Lawrence News

Raghava Lawrence News

நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோனா வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட திரைத்துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் தனக்கு தெரிந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலை மிக அருமையாக இசையமைத்ததாகவும் எனவே அவருக்கு அனிருத் இசையில் விஜய் முன்னாடி பாடவும் வாய்ப்பு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இது அந்த மாற்றுத்திறனாளி சிறுவ நின் வாழ்நாள் கனவாக நின்னைவாக்கும் என்ற ஒரு வேண்டுகோளை ட்விட்டர் வாயிலாக வைத்தார்.

இந்த கோரிக்கையை தற்போது விஜய் மற்றும் அனிருத் ஏற்றுக் கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று குறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இது குறித்து நேற்று இரவு விஜய்யிடம் ராகவா லாரன்ஸ் பேசிய போது ’அந்த சிறுவனை ஊரடங்கு முடிந்த உடன் அழைத்து வரும்படியும் அந்த சிறுவனுக்கு கண்டிப்பாக அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஒரு ஏழை மாற்றுத்திறனாளி சிறுவனின் கனவு நனவாக போவதை அறிந்து நான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here