Shame on Vijay Sethupathi is Top Trending
கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரரும் இலங்கை அணியின் ஜாம்பவான் ஆன முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு பயோபிக் படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர்.
இத் திரைப்படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி என்ற இயக்குனர் இயக்கவுள்ளார். மேலும் இத் திரைபடத்தில் முத்தையா முரளிதரனாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
Shame on Vijay Sethupathi is Top Trendingவிஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு “800” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் யாரும் படைக்காத ஒரு சாதனையை முத்தையா முரளிதரன் படைத்துள்ளார் .
#MakkalSelvan #VijaySethupathi in & as #MuthiahMuralidaran#MuralidaranBiopic ‘800’ pic.twitter.com/ntvJyiKeY8
— Kaushik LM (@LMKMovieManiac) October 13, 2020
அது என்னவென்றால் டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற மிக பெரிய சாதனையை இவர் படைத்துள்ளார் எனவே இத் திரைப்படத்திற்கு “800” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இத்திரைபடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு சில அரசியல் கட்சிகளிடமிருந்தும் மேலும் சில அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதையும் பாருங்க : KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
முத்தையா முரளிதரன் தமிழ்நாட்டில் பிறந்து வழந்தாலும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக விடுதலைப்புலிகள் போராடியபோது இவர் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றும் சிங்களத்தின் பக்கம் நின்று தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார் .
எனவே அவரது கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.
இந்நிலையில் “800” படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி மோஷன் போஸ்டரும் வெளியானது.
இதனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.