நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு பிரபல பாலிவுட் நடிகர் காரணமா ?

Sushant Singh Suicide : Case filed against Salman Khan, Karan Johar, others in Bihar court

0
20

Sushant Singh Suicide : Case filed against Salman Khan, Karan Johar, others in Bihar court | நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையின் பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான்

Sushant Singh suicide

Sushant Singh Suicide - Hi5Fox
Sushant Singh Suicide : Case filed against Salman Khan, Karan Johar, others in Bihar court

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையின் பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் திரைத்துறையை சேர்ந்த 8 பேர் மீது வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : மனஅழுத்ததாழ் விபரீத முடிவெடுத்த நடிகர் !

பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்த சுஷாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரை போலீஸார் சடலமாக மீட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதையும் பாருங்க : பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்

அதில் வழக்கறிஞர் அவர்கள், பிரபல நடிகர் சல்மான்கான் மற்றும் பிரபல இயக்குரான கரன் ஜோகர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது நடிகர் சுஷாந்த் சிங் கை தற் கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஞ்சய் நிருபம் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, ‘கடந்த ஆண்டு வெளியான சிச்சோரே படம் ஹிட்டான பிறகு சுஷாந்த் சிங் ராஜ்புட் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் எனவும் . கடந்த ஆறு மாதங்களில் அந்த 7 படங்களும் சுஷாந்திடம் இருந்து கை நழுவியது எப்படி?’ என சஞ்சய் நிருபம் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : நடிகை சஞ்சனா சிங்கின் உண்மை குணம் !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here