பாலிவுட் நடிகர்களில் சின்ன திரையில் இருந்து பெரிய திரையில் சாதித்தவர்களில் முக்கியமானவர் சுஷாந்த் சிங்.இவர் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட `எம்.எஸ்.தோனி: அண்டோல்டு ஸ்டோரி’ படம் மூலம் கவனம் பெற்றார்.
இதையும் பாருங்க : பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்
கொரோனா ஊரடங்கால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியா திரையுலகமும் ஆட்டம் கண்டிருக்கிறது. நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவருமே வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள்.
பாலிவுட்டில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்த சுஷாந்த், வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடுமையான மன அழுத்த்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக மருத்துவரிடம் தொடந்து சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.
Bihar: People gather outside #SushantSinghRajput‘s residence in Patna, where his family resides.
The actor committed suicide in Mumbai today. pic.twitter.com/3ofsOKTcd4
— ANI (@ANI) June 14, 2020
இந்தநிலையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள சுஷாந்த்தின் வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரை போலீஸார் சடலமாக மீட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த செய்தியால் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் அனைவருமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் பாருங்க : நடிகை சஞ்சனா சிங்கின் உண்மை குணம் !!