பிகஃபாஸ் சீசன் 4 நாள் 23 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 23 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும் .

0
59
bigg boss 4 tamil day 23
bigg boss 4 tamil day 23

Bigg boss tamil season 4 day 23 Short Stroy

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 23ல் நடந்த நிகழ்ச்சில முக்கியமான நிகழ்வு னு பார்த்த முதல அனிதா சம்பத் ஓட பிரச்னை அப்புறம் இரண்டவது தங்கம் எடுக்குற ஒரு போட்டி முன்றாவது பாலாவிற்கும் அர்ச்சனா ,வேல்முருகன் ,ரியோ இவங்க மூணு பேருக்கும் சண்டை இது தான் கதை சுருக்கம்.

சுரேஷ் அனிதா பிரச்னை :

இன்னைக்கு எபிசோடு அனிதா ஓட பிரச்சனைலதா ஆரம்பிச்சது அனிதா அவர்கள் பாத்ரூமில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார் இதைப் பார்த்த ஆரி ரியோ நிஷா வேல் மற்றும் சனம் அனிதாவை சமாதானப்படுத்த முற்பட்டனர்.

பின்பு சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அனிதா எனக்கு யாரும் சப்போர்ட் செய்ய மாட்டேங்கிறீங்க என்றும் பாலா சப்போர்ட் பண்ண மாதிரி வேற யாரும் இங்க சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறீங்க என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

நான் சொல்வதையே அனிதா அவர்கள் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க என்று ரியோவும் அவள் பேசுனது தப்பு என்று அர்ச்சனாவும் அனிதாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அர்ச்சனா மட்டுமே அனிதா பேசியது தவறு என்ற எண்ணத்தில் சுரேஷ் அவர்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தார்.

மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அனிதா பேசியது சரிதான் ஆனால் அந்தக் கருத்தில் சுரேஷ் அவர்களின் பெயர்களை சொல்லாமல் சொல்லி இருக்கலாம் என்ற நோக்கில் பேசிக்கொண்டிருந்தனர்

நான் பேசியது தவறு என்ற எண்ணத்தில் நான் மன்னிப்பு கேட்க முற்பட்டபோது அதை கூட கேட்காமல் சுரேஷ் சார் சென்றது மேலும் தான் கூறும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு நான் தவறு செய்து விட்டேனா என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது இது .

எனக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது என்று அனிதா தெரிவித்தார்

பின்பு பிக் பாஸ் அனிதாவை அழைத்து பேசினார் அப்போது அனிதா நான் இங்கு வந்தது தப்பு என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டிருந்தார் அப்போது பிக்பாஸ் அவரை சமாதானப்படுத்த முற்பட்டார் பின்பு கடைசியாக அவருடைய கணவரை விசாரித்ததாக பிக்பாஸ் இடம் அனிதா தெரிவித்தார்

அதற்கு பிக் பாஸ் உங்கள் மனதில் பட்ட கருத்துகளை தெரிவித்து இயல்பாக இருங்கள் என்று கூறினார் பின்பு உங்களுடைய கணவரும் கன்னுக்குட்டியை விசாரித்ததாக சொல்ல சொன்னாரு இதனை கேட்ட அனிதா சந்தோஷத்தில் தேம்பித் தேம்பி அழுதார்.

தங்க சுரங்க டாஸ்க் : 

பின்பு சிறிது நேரம் கழித்து இன்றைய டாஸ்க் பற்றிய அறிவிப்பு வருகின்றது அது என்னவென்றால் இந்த வீட்டில் உள்ள அனைவரும் 4 பேர் என்ற குழுவாக பிரிந்து வெளியே ஒரு ரூமில் தங்கச் சுரங்கம் போன்ற ஒரு ரூமில் மண்ணில் உள்ள தங்க துண்டுகளை சேமிக்க வேண்டும்

இறுதியில் யார் அதிகமாக தங்க துண்டுகளை சேமித்து வைத்திருக்கிறார்களோ அவர்களே இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் அவர்

உள்ளே சென்ற அனைவரும் முடிந்தவரையில் அவர்களுக்கான தங்களை சேமித்து வைத்துக் கொண்டனர். பின்பு ஒரு சிலர் அவர்கள் சேமித்து வைத்த தங்கங்களை திருடும் முயற்சியையும் ஈடுபட்டனர்.

ஒரு புறம் சுரேஷ் அவர்கள் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் அவர்களின் வயதான தோற்றத்தில் உள்ள கதாபாத்திரம் போல் வேஷம் அணிந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் உரையாடி  கொண்டிருந்தார்.

மேலும் மறைத்து வைத்து தங்கத்தைத் திருடும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இதனை பார்த்த ரம்யா பாண்டியன் திருட்டுப் பாட்டி என்று அவரை கிண்டல் செய்து கொண்டிருந்தார்

குறிப்பாக ஆரி அவர்களின் தங்கங்களை ஆஜித்தும் சுரேஷும் திருடி பிரித்து கொண்டது போல் உள்ளது.

சேமித்து வைத்த தங்க துண்டுகளை அவங்களே அதை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் அனைவரும் அவர்களுக்கு பாதுகாப்பு என்று தோன்றிய பகுதிகளில் சேமித்து வைத்தனர்

பாலாவும் அதேபோல் அவர் சேமித்து வைத்த தங்கத்தை பெட்டிகளிலும் துணிகளிலும் அவர் மறைத்து வைத்து யாருக்கும் தெரியாமல் வைத்தார் அதேபோல் சேமித்து வைத்த அந்த பெட்டியை யாருக்கும் தெரியாமல் இருக்க பெயர்களையும் பெட்டியும் மாற்றி வைத்துக் கொண்டிருந்தார்

இதனைப் பார்த்த கேப்ரில்லா மற்றும் ஷிவானி இது பாலாவின் விளையாட்டு உக்தியாக கூட இருக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்

பின்பு திருடிய தங்களை அனைவரும் பாதுகாத்து வைத்துக் கொண்டனர் இவ்வாறாக தங்கச் சுரங்க டாஸ்க் முடிவுக்கு வந்தது.

பாலா vs அர்ச்சனா , ரியோ சண்டை :

ஒரு வழியாக தங்கச் சுரங்கத டாஸ்க் முடிந்தபின்பு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

பின்பு பாலா உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அர்ச்சனா லாவகமாக வேல்முருகன் இடம் சென்று அண்ணா வீடு கூட்ட வில்லையா என்று கேட்டு பேச ஆரம்பித்தார்.

பாலா நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் வேல்முருகன் கூப்பிடும்போது பாலா எழுந்திருக்கவில்லை

கிளீனிங் டீமில் உள்ள வேல்முருகன் மற்றும் ஆஜித் வீடு கூட்ட ஆரம்பித்தார்கள் பின்பு தூங்கி கொண்டிருக்கும் பாலாவை ஆஜித் சென்று எழுப்புமாறு கேட்டுக் கொண்டார் வேல்முருகன்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்

ஆஜித் சென்று பாலாவை எழுப்பிய பிறகு என்னால் உடம்பு முடியவில்லை நான் செய்ய மாட்டேன் என்றது போல் பாலா கூறினார்.

இதனை நோட்டமிட்ட ரியோ மற்றும் அர்ச்சனா பாலாவை வம்புக்கு இழுக்கும் நோக்கத்தில் பேச்சைத் தொடங்கினர்

நானும் தான் காலையிலிருந்து வேலை செய்தேன் நான் அனைவருக்கும் சமைக்க வில்லையா என்று பேச ஆரம்பித்தார் அர்ச்சனா.

நாம் பேசியதை தூங்கும் போது எட்டி மட்டும் பார்க்க தெரிகிறதா என்று பாலாவை கிண்டல் செய்ததார் அர்ச்சனா.இதனை இதனைக்கேட்ட பாலா கோபமாக எழுந்து வந்து பின்பு கோவமாக வீடு கூட்ட ஆரம்பித்தார்

என்னை ஏன் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை ஏன் எழுப்பி வீடுகூட சொல்கிறீர்கள் என்று வேல்முருகன் இடம் பாலா கேட்டுக்கொண்டிருந்தார் இதெல்லாம் தவறு என்று தெரிவித்தார்.

அடுத்து நான் விட்டு கேப்டன் ஆகும்பொழுது அனைவரையும் அம்மியில் அரைக்க விடுகிறேன் என்பது பாலா கிண்டலாக தெரிவித்தார்.

இதனைக்கேட்ட அர்ச்சனாவும் ரியோவும் நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம் நீங்கள் பேசியது தவறு என்று பாலாவிடம் வாக்குவாதம் செய்தனர்.

பாலாவோ நான் பேசியது தவறு இல்லை என்ற நோக்கில் பேசிக்கொண்டிருந்தார்

இதை நீங்கள் முன்பே சொல்லியிருக்க வேண்டும் சொல்லிருந்தால் நாங்கள் உங்களை டிஸ்டர்ப் பண்ணி இருக்க மாட்டோம் என்று ரியோவும் அர்ச்சனாவும் கூட்டு சேர்ந்தது பாலாவை கார்னர் செய்தனர்

இவ்வளவு பெரிய சண்டை நடைபெறும் பொழுது மற்ற அனைவரும் பாலாவிற்கு சப்போர்ட் செய்யாமல் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்

கதை முடிவுரை :

குறிப்பாக பாலா விற்கும் ரியோவிற்கும் நடந்த வாக்குவாதத்தில் ரியோவிஇன் ஒவ்வொரு வார்த்தைக்கும் பாலா கோப படாமல் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் பேசிக்கொண்டிருந்தார்

இவ்வாறாக இன்றைய எபிசோட் சென்றது நாளை தான் தெரியும் இந்த எபிசோட் எவ்வாறு முடிந்தது பொறுத்திருந்து பார்ப்போம் இவ்வாறு முடிந்தது என்று.

Watch Online(பிகஃபாஸ் சீசன் 4 நாள் 23)

பிகஃபாஸ் சீசன் 4 இல் 23 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here