பிகஃபாஸ் சீசன் 4 நாள் 24 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 24 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும் .

0
57

bigg boss 4 tamil day 24

Bigg boss tamil season 4 day 24 Short Stroy

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 24ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வு னு பார்த்தா பாலாவிற்கும் அர்ச்சனாவிற்கும் நடந்த சண்டை பின்பு நடந்த சமாதானம் அப்புறம் தங்கச் சுரங்கம் டாஸ்கின் முடிவுகள், புதிய சக்தி பெறும் அந்த எட்டு பேர் கடைசியாக விளையாட்டு விபரீதமான கதை இதுதான் இன்றைய நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வுகள்.

பாலா vs அர்ச்சனா சண்டை சமாதானம் :

பிக் பாஸில் நேற்று நடந்த சண்டையில் தான் இன்றைய எபிசோடும் தொடங்கியது.

ஆனால் நேற்றைய எபிசோடை விட இன்று பாலாவிற்கு எதிராகவே சூழ்நிலைகள் காணப்பட்டது போல் தெரிந்தது.

அர்ச்சனா, வேல்முருகன் என்னிடம் உங்களால் முடியவில்லை என்று எதுவும் என்னிடம் தெரிவிக்க வில்லை ஆகையால் தான் நான் உங்களை எழுப்பி வீடு கூட்ட வைத்தேன் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அர்ச்சனா தெரிவித்தார்.

நான் வேலை செய்ய மாட்டேன் என்று கூறவில்லை சொல்வதற்கு ஒரு விதம் உண்டு நீங்கள் என்னை கிண்டல் செய்வது போல் இருந்தது .மேலும் இப்படி சொன்னால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று பாலா தெரிவித்தார்.

கடைசியில் அர்ச்சனா இதற்கு மேல் நான் உங்களை கண்டு கொள்ள மாட்டேன் மேலும் மீதும் உள்ள இந்த நாட்களுக்கு நான் தான் உங்கள் கேப்டன் உங்களுக்கு என்னை பிடிக்கிறதோ இல்லையோ நான் சொல்வதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று அர்ச்சனா தெரிவித்தார்.

இதற்கு பாலா இப்படியெல்லாம் அதிகாரம் பண்ணுவது போல் தெரிவித்தால் நான் செய்யமாட்டேன் என்று கூறினார்

அர்ச்சனா அப்படி என்றால் சொல்லி விடுங்கள் என்னை பிடிக்கவில்லை .நான் கேப்டனா இருப்பதும் பிடிக்கவில்லை எனவே இனிமேல் நான் சொல்வதை எதையும் செய்யமாட்டேன் என்று சொல்லிவிடுங்கள் என்று பாலாவிடம் அர்ச்சனா கேட்டார்.

அதற்கு பாலா நான் அப்படி ஏதும் சொல்லவில்லையே என்று கூறினார். இப்படியே சண்டை பெரிதாகி கொண்டு போக ஒருகட்டத்தில் ஹவுஸ் மேட் அனைவரும் பாலாவிற்கு எதிராகவே பேசியது போல் தோன்றியது.

பின்பு ஒரு கட்டத்தில் எப்படியோ தட்டுத்தடுமாறி சமாளித்த பாலா பின்பு வெளியே சென்று அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார்.

ஆனால் ஹவுஸ் மேட் என்னவோ பாலாவை சமாதானப்படுத்த அம்மாவிடம் சண்டை போட்ட அர்ச்சனாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர் முதலில் ரியோ பின்பு நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் மற்றும் சோம் அனைவரும் சமாதானப்படுத்தினர்

ஒருகட்டத்தில் விரக்தியில் இருந்த பாலா இரவில் நடமாடிக் கொண்டிருந்தார் அப்பொழுது அர்ச்சனாவும் பாலாவையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் சுரேஷும் சம்மித்தாவும் இறங்கினர்

பின்பு பாலாவையும் அர்ச்சனாவும் வெளியில் அமர வைத்து சமாதான முயற்சியில் இறங்கினார் சம்மித்தா

முதலில் பேசத் தொடங்கிய பாலா சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார் பின்பு அர்ச்சனா பேச தொடங்கியபின் ஒரு தாய் தன் பிள்ளையின் மீது வைத்த அன்பைப் போல் பாலா நீ எனக்கு வேணும் டா நீ என்ன வேணாம்னு சொன்னா நான் எங்கே போவேன் இன்று மிகவும் எமோஷனலாக பேசினார் அர்ச்சனா

இப்படி ஒரு கட்டத்தில் எமோஷனலான அர்ச்சனாவும் போலவும் கட்டித்தழுவி சமாதனம் ஆயினர்

இதை பார்க்கும் பொழுது நமக்கு சற்று எமோஷனலாக தான் இருந்தது.இவ்வாறாக சண்டையில் ஆரம்பித்த இந்த நிகழ்வு கடைசியில் தாய்-மகன் உறவு போல் முடிந்தது.

தங்க சுரங்கம் டாஸ்கின் முடிவுகள் மற்றும் பவர் :

எப்படியோ சண்டையில் ஆரம்பித்த நிகழ்வு கடைசியில் சமாதானத்தில் முடிந்தது பின்பு தங்கச் சுரங்கத்தின் முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று பிக்பாஸில் இருந்து அறிவிப்பு வந்தது இதனால் பின்பு அனைவரும் லிவ்விங் ஏரியாவில் அமர்ந்தனர்.

ஒவ்வொருவரும் தான் சேமித்த தங்கத்தை கண்பாசன் ரூமில் சென்று எடை போட்டுப் பார்த்தனர் இதில் பாலாவிடம் அதிகமான தங்கம் இருந்தது

பின்பு பிக் பாஸ் மொத்தமுள்ள ஹவுஸ் மேட்சில் இருந்து மூன்று அணிகளாக பிரிய வேண்டும் அதில் ஒரு அணியில் அதிகமாக 8 பேர் இருக்கவேண்டும் மீதமுள்ள இரண்டு அணிகள் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

அறிவித்த உடனே அர்ச்சனா ரியோ காங் ஒரு குழுவாக அமைத்து நாங்கள் எட்டுப்பேர் முதல் டீம் என்று தெரிவித்தார் அர்ச்சனா

மறுமுனையில் அனைவரையும் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார் இதனால் அனைவரும் சரிசமமாக பிடிக்கலாம் அப்பதான் தங்கம் கம்மியாக இருக்கிறவங்களும் தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் பேசினார்

பின்பு சிவானி நான் தனியாக இருக்கிறேன் என்று கூறி தனியாக செல்ல அப்படியெல்லாம் முடியாது நானும் வருகிறேன் என்று ரம்யாவும் செல்ல சற்று கூச்சல் குழப்பம் நிலவியது

அப்படியே சென்று கொண்டிருக்க கடைசியில் அவர்கள் மூன்று அணிகளாக பிரிந்தனர் இதில் பாலா கடைசியாக அர்ச்சனாவிடம் போய் சேர்ந்து கொள்வதாக ஒரு புது உக்தி செய்தார் எண்ணியது போல் பாலாவிடம் டீம் வெற்றி பெற்றது.

பின்பு வெற்றிபெற்ற அணியிடம் ஒரு பவர் கொடுக்கப்படும் என்று பிக்பாஸ் தெரிவித்தார் அது என்ன பவர் என்றால் நீங்கள் இனிமேல் இந்த வீட்டில் வேலை செய்ய தேவையில்லை உங்களிடம் தோற்ற அந்த இரு அணிகள் உங்களுக்கான வேலைகளை செய்யலாம் நீங்கள் அதற்கான வேலையை நீங்கள் தெரிவிக்கலாம் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்று தெரிவித்தார் பிக் பாஸ்

இதனை நிஷா முதலில் எதிர்த்தார் விளையாட்டாக இதெல்லாம் நியாயமே இல்லை பிக்பாஸ் இடம் முறையிட்டார்.

இவ்வாறாக பவர் கிடைத்த பாலாவின் டீம் எப்படியெல்லாம் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டம் போட்டனர் நேற்று எனது ஈசி ஆக தான் டாஸ்க் கொடுக்கப்பட்டது பாட்டு பாடுவதும் ஆடுவதும் கிண்டல் செய்வதும் போன்ற டாஸ்க் கொடுக்க பட்டது.

விளையாட்டு விபரீதமான கதை:

இவ்வாறு ஜாலியான டாஸ்க் இன் மூலம் ஆரம்பித்த இந்த விளையாட்டானது சனத்தை மற்றும் பாதித்தது பாலா விளையாட்டாக சொன்ன டாஸ்கை அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டார்

முதலில் பாலா சொன்ன டாஸ்க் ஜாலியாக எடுத்துக் கொண்டு செய்த சனம் கடைசியில் இரவில் அதை உணர்ந்து அழுதார் என்னுடைய பிரண்ட்ஷிப்பை பாலா தவறாக எடுத்துக்கொண்டு என்னை ஏமாற்றினார் என்று சனம் தெரிவித்தார்

பின்பு சனம் அழுவதை உணர்ந்த பாலா ஏன் என்னாச்சு என்று விசாரித்தார் அப்பொழுதுதான் பாலா நீங்கள் கொடுத்த டாஸ்க்கால்தான் சனம் தற்போது அழுது கொண்டிருக்கிறார் என்று அனிதாவும் ஆரியம் தெரிவித்தனர்.

நான் இதை வேண்டுமென்று செய்யவில்லை இது ஜஸ்ட் டாக் இதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் ஏனென்றால் இதை நான் தெரிந்து செய்யவில்லை இது ஜஸ்ட் டாஸ்க் என்று தெரிவித்து சென்றார்

பின்பு பாலாவிடம் சிவாநீயும் கேபியும் பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது அங்கு சென்ற சனம் நான் உங்களை எப்படி நினைப்பது பிரண்டாக இல்ல எப்படி நினைப்பது என்பது கேட்டார் அப்பொழுது பாலா நான் உங்களுக்கு பிரண்ட் இல்லை ஜஸ்ட் ஒரு குட் பேர்சன் என்று தெரிவித்தார்

நானும் காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி மன்னிப்பு தெரிவித்தார் பாலா இவ்வாறாக இன்றைய எபிசோடு முடிந்தது

கதை முடிவுரை :

எப்படியோ சண்டையில் ஆரம்பித்த சில நிகழ்வு கடைசியில் சமாதானமாக முடிந்தது கூடவே சற்று புதிய பாசப் பிணைப்புகளும் உருவாகியது ஒருபுறம் அர்ச்சனாவுக்கும் பாலா விருக்கும் நல்ல பிணைப்பு உருவாகியது அதேபோல் பாலாவிற்கு சிவாநீக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பு உருவாக்கியது போல் தெரிந்தது நாளை எபிசோட் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Watch Online(பிகஃபாஸ் சீசன் 4 நாள் 24)

பிகஃபாஸ் சீசன் 4 இல் 24 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 23 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here