மாஸ்டர் நேரடி OTT ஆபர் இவளோ கோடியா?

0
39

Master OTT Release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லலித்குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Buzz : Master OTT Release - Hi5Fox
Breaking Buzz : Master OTT Release – Hi5Fox

இதனிடையே, இந்த லாக் டவுனைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை டிஜிட்டல் நிறுவனங்கள் அதிக விலைக்கு கைப்பற்றி வருகின்றன.

அதில் அமேசான் பிரைம் இல் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் கடந்த மாதம் OTT யில் ரீலிஸ் செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஜூன் 19 அன்று ரிலீஸ் செய்யபடுகிறது.

தற்போது அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முன்னணி ஸ்ட்ரீமிங் இயங்குதளங்கள் மாஸ்டரின் தயாரிப்பாளர்களை அணுகியுள்ளன, அந்தந்த தளங்களில் நேரடியாக வெளியிடுவதற்கு 150 கோடியிலிருந்து 175 கோடி வரை தருவதாக தகவல் தெரிவிக்கின்றன .

ஆனால் தயாரிப்பு நிறுவனம் தளபதி விஜய்யின் “மாஸ்டர்” ஐ எந்த OTT தளத்திற்கும் படத்தை விற்க ஆர்வம் காட்டவில்லை. படத்தை ரிலீஸ் சிறிது காலம் ஆகும் என்றாலும், தனது ரசிகர்கள் ரசிக்க படத்தை முதலில் திரையரங்குகளில் வெளியிட தளபதி விஜய் முடிவு செய்துள்ளதாக படகுழு தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

இதையும் பாருங்க : தளபதி 65 ? துப்பாக்கி 2 வா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here