Rohit Sharma Select as Test Captain of Indian Team
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடரை, இந்திய அணி கைப்பற்றி பட்டையைக் கிளப்பியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடருக்கு அடுத்து இலங்கை அணிக்கு எதிராக டீ20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் பற்றிய விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
The All-India Senior Selection Committee has named @ImRo45 as #TeamIndia's Test Captain. pic.twitter.com/GaIUZDthtf
— BCCI (@BCCI) February 19, 2022
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை கடந்த ஜனவரி மாதம் விராட் கோலி ராஜினாமா செய்தார். இதற்கு அவருக்கு பிசிசிஐக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளே காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட போவது யார் என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் விரைவில் வர உள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குவார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசமான ஃபார்மில் இருக்கும் அஜிங்க்யே ரஹானே மற்றும் சித்தேஸ்வேர் புஜாரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாகியுள்ளார்.
மேலும் படிக்க :
Follow Us at Google News : :
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.