வெற்றிமாறன் சூர்யா கூட்டணி உறுதி ! வதந்திகளை நம்பாதீர்கள் – தயாரிப்பாளர் தாணு

வாடிவாசலில் சூர்யா தான் நடிக்கிறார் ! வெற்றிமாறன் சூர்யா கூட்டணி உறுதி ! வதந்திகளை நம்பாதீர்கள் -தயாரிப்பாளர் தாணு விளக்கம்

0
51
Vaadivasal Not Dropped
Vaadivasal Not Dropped
- ADS BY ADSTERRA -

Vaadivasal Not Dropped

தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் ஆவர். இவர் கடைசியா நடிகர் தனுஷ்சை வைத்து அசுரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கினார். இவரின் அடுத்த படமானது சூர்யாவை வைத்து வாடி வாசல் என்ற திரைப்படத்தை இயக்க போவதாக இப்படத்தின் தயாரிப்பாளார் ஆன கலைப்புலி எஸ்.தாணு அறிவித்திருந்தார்

வாடி வாசல் திரைபடமானது தமிழ் மக்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை மைய கதைக்களமாக கொண்டுள்ள இந்தப்படத்தில் நடிகர் சூர்யா காளைகளை அடக்கும் வீரராக நடித்து வருகிறார்.இப்படத்திற்காக நடிகர் சூர்யா நீண்ட தலைமுடியை வளர்த்து வருவதாகவும் தகவல்கள் வந்தன

வடிவாசலில் இருந்து சூர்யா விலகிவிட்டார் ?

இந்நிலையில், கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் பெயரிலான ட்விட்டர் கணக்கு ஒன்றில் இருந்து வடிவாசல் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் குழப்பம் அடைந்த சூர்யாவின் ரசிகர்கள் இதை பற்றி ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் வடிவாசலில் இருந்து சூர்யா விலகிவிட்டாரா அல்லது அவருக்கு பதிலாக வேறு யாரேனும் இப்படத்தில் நடிக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.

சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த தாணு

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சொந்த ட்விட்டர் கணக்கில் இருந்து விளக்கம் அளித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு கூறியதாவது “எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும். ” என ட்வீட் செய்து வாடிவாசல் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் தன்னுடைய போலி ட்விட்டர் கணக்கை யாரும் நம்ப வேண்டாம் மேலும் அந்த கணக்கை புகார் செய்யுமாறு தெரிவித்ருந்தார். இந்த (Vaadivasal Not Dropped) செய்தியை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

மேலும் படிக்க : பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here