மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு தளபதி விஜய் செய்தது என்ன தெரியுமா ?

0
250

Vijay master movie update

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Master‘. மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லலித்குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Vijay master movie update - Tamil Cinema News - Hi5Fox
Vijay master movie update – Tamil Cinema News – Hi5Fox

Master திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

உலகமே கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில் திரைஅரங்கு சார்ந்த அணைத்து தொழில்களும் முடங்கிவிட்டது. மீண்டும் எப்போது திரையரங்களை திறப்பார்கள் என்பது தெரியாத நிலையில் மீண்டும் திரையரங்குகளுக்கு மக்களை கொண்டுவர சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர் படத்தைத்தான் திரைஅரங்கு உரிமையாளர்கள் நம்பியிருந்தார்கள்.

ஆனால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தை முன்னணி OTT இயங்குதளமான அமேசான் பிரைமில் இல் வெளியிட்டுள்ளார் தயாரிப்பளார் சூர்யா. அடுத்தபடியாக தியேட்டர் ஓனர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருப்பது விஜய்யின் மாஸ்டர் படத்தை தான். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

மாநகரம், கைதி உள்ளிட்ட திரைப்படங்களைப் பார்த்தபோது தளபதி விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் மீது ஒரு மரியாதை ஏற்பட்டு அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார். அதை மாஸ்டர் படத்தில் மிகச் சரியாக வெளிப்படுத்திக் உளளார் என்றே கூறவேண்டும்.

ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் படத்தின் அடுத்த அறிவுப்புக்காக காத்திருக்கின்றனர் (Vijay master movie update).இந்நிலையில் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் வெளியீட்டில் மாறுதல்கள் ஏற்பட்டதால் சில மாற்றங்களைச் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் தான் முழு படமும் தயாரிப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறபடுகிறது.

தற்போது முழு படத்தையும் தளபதி விஜய் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் படக்குழுவினர் சமீபத்தில் பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்து மிரண்டுபோன தளபதி விஜய் உடனடியாக லோகேஷ் கனகராஜை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

படம் நன்றாக வந்துள்ளது என்று தளபதி விஜய் அவர்களும் மேலும் படம் பார்த்த அனைவருமே லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளனர்.

இதையும் பாருங்க : KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here