Rakul Preet Singh to wrap up Ayalaan
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிவியல் சார்ந்த கதை அம்சம் கொண்ட படம் தான் அயலான் இப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார் மேலும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங் கதா நாயகியாக முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார்.
இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் மேலும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் .
இந்த படத்தில் கருணாகரன் மற்றும் யோகி பாபு ,இஷா கொப்பிகர், ஷரத் கெல்கர் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படம் ஒரு அறிவியல் புனைகதை என்று கூறப்படுகிறது, இது பூமியில் தரையிறங்கும் ஒரு அன்னிய உயிரினத்தை மையமாக கொண்டு உருவாக்க படுகிறது.
தற்போது ‘அயலான்’ படக்குழு குழு சமீபத்தில் படத்தின் கடைசி அட்டவணை படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியது, மேலும் பத்து நாட்களில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் பகுதிகள் முடிந்தது இதனால் அதை தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அவர் அயலான் கடைசி அட்டவணையை கிட்டத்தட்ட 3 நாட்களில் முடித்து விட்டேன் என்றும்.
இயக்குனர் ரவிக்குமார் உணர்ச்சிமிக்கவர் மற்றும் இனிமையான கோஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதோ அந்த ட்வீட்:
Almost wrapping last schedule of #ayalaan 😁 last 3 days for me.. what a passionate director @Ravikumar_Dir and sweetest costar @Siva_Kartikeyan ! ❤️ pic.twitter.com/jF7G0eHCsj
— Rakul Singh (@Rakulpreet) January 19, 2021