சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்

90 களின் கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புதியதாக ஒரு படம் உருவாக உள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகை அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது

0
129
Anasuya In Silk Smitha Biopic
Anasuya In Silk Smitha Biopic

Anasuya In Silk Smitha Biopic

நடிகை சில்க் ஸ்மிதா தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார் .பின்பு திடீரென 1996 ஆண்டு தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா. இவரது மரணத்தில் மர்மம் நிலவுவது குறிப்பிட தக்கது.

இந்நிலையில் இவரது வாழ்க்கை ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வித்யாபாலன் நடிக்க ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற பெயரில்படமாக்கப்பட்டது.

‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ படம் பாக்ஸ் ஆபிசிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் தமிழும் நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாக உள்ளது என்ற செய்தி தற்போது வெளிவந்துளது. இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தயாரிக்கிறார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், இப் படத்தை இயக்குகிறார். எனவே சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் தெலுங்கு கிளாமர் நடிகை அனுசுயா பரத்வாஜ் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் : தமிழகத்தில் 1000 திரையரங்கு !! ஹிந்தி ரீலீஸ் !!
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here