Andhadhun Tamil Remake
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சிம்ரன் .நடிகர் விஜயின் காம்பினேஷன்நில் பல வெற்றி திரைப்படங்கள் வெளி வந்துள்ளன.
சிறுது காலம் சினிமாவில் ஒதுங்கி இருந்த சிம்ரன் பின்பு ஐந்தாம் படை மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் முக்கியமான கதா பாத்திரங்களில் நடித்துருந்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த படத்திழும் கமிட் ஆக வில்லை.
அந்தாதுான் தமிழ் ரீமேக் :
தற்போது ஹிந்தியில் வெளியான, அந்தாதுான் படம், தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை தியாகராஜன் வாங்கியுள்ளார். இதில், தபு நடித்த கதாபாத்திரத்தில், சிம்ரன்னும் நாயகனாக பிரசாந்த் நடிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடிகர் பிரசாந்த் சிம்ரன் மீண்டும் இணைந்து நடிப்பது அவரது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, சிம்ரன் கூறுகையில், இந்திய சினிமாவில், அந்தாதுான் படம் முக்கியமான ஒரு மைல்கல் படம். தபு பாத்திரத்தில் நான் நடிப்பது, பெரிய பொறுப்பு. அந்த சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி என்றும் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பிரசாந்த் உடன் நடிப்பது மகிழ்ச்சி, என்றார்.