Rajini Politics Latest News
அடுத்த வருடம் மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது இதனால் தமிழக அரசியல் பரபரப்பாக்க சென்று கொன்றிருக்கும் இந்த நிலையில் , இன்று காலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பானது சென்னையில் உள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில், காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த்.
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதிதித்ததாக தெரிகிறது. தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த கூட்டத்திற்குகாவல் துறை பாதுகாப்பு வழங்குமாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களை தவிர, வேறு யாரும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் பல பிரச்னைகளை பற்றி விவாதித்தாகவும் மேலும் என் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் சிலர் செயல் படுவதாகவும் என்னுடன் இருந்தால் அரசியலில் சம்பாதிக்க முடியாது
எனவும் மன்றத்தின் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு உள்ளிட்ட பல விஷயங்களை பேசியதாகவும் தெரிகிறது
இறுதியாக மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசிய ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை கூடிய விரைவில் அறிவிப்பேன் எனக் கூறுவேன் என்று செய்தியர்களுக்கு பேட்டி அளித்தார்.
எனவே அவரது ரசிகர்கள் விரைவில் நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர் இதனால் அவர் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அதற்கான வேலைகள் நடை பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்குகின்றன