Actress Anasuya Debut In Tamil
தெலுங்கில் சினிமாவில் முன்னனி டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அனுசுயா இவர் மேலும் கிளாமர்க்கு பெயர் போனவர் இவர் பல தெலுங்கு சினிமாவில் சின்ன வேடம் முதல் முக்கியமான அறிமுகமாகி அங்கும் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை அனுசுயா எனவே பல ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
நடிகை அனுசுயா தெலுங்கில் ‘ரங்கஸ்தலம், எப் 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் “புஷ்பா”, “ரங்க மார்த்தாண்டா”, “ஆச்சார்யா” ஆகிய திரை படங்களில் நடித்து வருகிறார்.
இவர் எப்போது தமிழ் நடிக்க வருவார் என்ற எதிர்ப்பரப்பு இருந்த நிலையில் தெலுங்கிலிருந்து தற்போது தமிழுக்கு நடிக்க வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவருடைய சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “திறமையானவருடன் ஒரு பிணைப்பு, உண்மையாலுமே மக்கள் செல்வன், மற்றுமொரு சிறந்த கதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ்” என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இவர் எந்த படத்தில் நடிக்ககிறார் என்பது உள்ளிட்ட தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுக ஆகி பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களும் மனதிலும் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது