Vikram and Dhruv starrer movie shoot in February 2021
சியான் விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடிக்கும் ‘சியான் 60‘ என அழைக்க படும் பெயரிட படாத படமானது இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் அவரகள் இயக்குகிறார் என அனைவருக்கும் தெரியும். இப்படமானது எப்போது தொடங்க படும் என்று ரசிகர்கள் அவளோடு எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
நடிகர் விக்ரம் தனது மகன் துருவுடன் முதல்முறையாக வெள்ளி திரையில் இணைந்து பணியாற்ற உள்ளனர், மேலும் இந்த திரைப்படம் துருவ்விக்கு மிகவும் முக்கியமான திரை படம் என்பதாலும் மேலும் இத்திரைப்படம் அதிரடி ஆக்ஷன் படம் என்ற செய்தியாலும், விக்ரம் துருவு இணையும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம்.
மேலும் ‘சியான் 60’ திரை படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது எனபதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிறப்பு சுவரொட்டியுடன் வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைகிறார்.
Happy to announce that my next directorial after #JagameThandhiram is…. ‘CHIYAAN60’#Chiyaan60
Starring the awesome Chiyaan Vikram Sir & Dhruv Vikram…
And it will be an @anirudhofficial musical..
Produced by @Lalit_SevenScr @7screenstudio
So excited for this film…. pic.twitter.com/Oof0je5Eg4
— karthik subbaraj (@karthiksubbaraj) June 8, 2020
தற்போது விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் தனது ‘கோப்ரா‘ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் சென்னையில் தொடங்கினார். ஜனவரி மாதத்திற்குள் அவர் இப்படத்தை முடித்து விட்டு பிப்ரவரி 2021 ‘சியான் 60’ படப்பிடிப்புக்கு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விக்ரம் மணி ரத்னத்தின் அவர்களின் வரலாற்று திரைப்படமான ‘பொன்னியன் செல்வன்‘ படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.