Vj Chitra Passed Away
வேலூரில் பிறந்த சித்ரா, முதலில் மக்கள் தொலைக்காட்சி சேனலலில் நிகழிச்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவக்கினார். பின்பு அவரின் திறமையினால் பல டிவிக்களில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர், பின்னர் அடுத்த கட்டமாக சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதன் மூலம் நடிகைகளுக்கு இனியனா ரசிகர்களை தன்னகத்தே ஈர்த்த்து வைத்துள்ளார்.
இதனால் எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் நடனம், மாடலிங் என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.
மேலும் அடிக்கடி ரசிகர்கள் கேக்கும் கேளிவிகளுக்கு பதில் அளித்து முகத்தில் அழகான புன்னகையை வெளிப்படுத்துவார்.
இந்த நிலையில் நேற்று இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் ரவி உடன் தங்கியிருந்த அவர், ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் திரை உலகம் மற்றும் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தகவல் அறிந்த காவல்துறையினர் மரணம் கொலையா அல்லது தற்கொலையா எனபது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தந்தை காமராஜ் காவல்நிலையத்தில் புகார்
இன்று காலை தனது மகளின் தற்கொலை குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் காவல்துறையில் புகார் அளித்ததாக செய்திகளில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மேலும் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை வீடு தூரம் என்பதால் தனது வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கி இருந்தார்.
இதனால் தந்தை காமராஜ் அளித்துள்ள புகாரால் சித்ராவின் தற்கொலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராமில் புகைபடம் பதிவேற்றம் செய்த சித்ரா :
நேற்று இரவு தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களைப் பதிவேற்றி வந்த சித்ரா மேலும் படப்பிடிப்பு வீடியோ ஒன்றையும் பதிவேற்றினார்.
சித்ரா பின்பு இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்டதன் பிண்ணனி என்ன மேலும் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன என்ற கேள்வி அவரது ரசிகர்கள் உள்பட அனைவரைடையே ஏற்பட்டுள்ளது என்ற கூற வேண்டும் .
இன்று ஹேமந்த் ரவியிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சித்ரா படப்பிடிப்பு முடித்து வந்த பிறகு குளிக்க செல்வதாக கூறி தன்னை வெளியே போக சொன்னவர், நீண்டநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தகேம் அடைந்து ஓட்டல் ஊழியர்களிடம் மாற்று சாவி வாங்கி அறையை திறந்தபோது, சித்ரா மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்களுக்கு கடந்த அக்., 19ம் தேதியே பதிவு திருமணம் செய்துவிட்டதாகவும் காவல் துறையினர் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
மேலும் திடீரென விடுதி அறையிலிருந்து ஹேம்நாத் வெளியேறியது ஏன் மற்றும் அதற்கான காரணம் என்ன என காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர். நடிகை சித்ராவின் மரணம் ( Vj Chitra Passed Away )சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.